முக்கொம்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து முதலமைச்சர் விளக்கம்

by Staff / 11-10-2023 01:33:20pm
 முக்கொம்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து முதலமைச்சர் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில், இன்று முக்கொம்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக இபிஎஸ் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இந்நிலையில், முக்கொம்பு விவகாரம் குறித்து முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார். அதன்படி, “முக்கொம்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர், 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories