தேசிய நெடுஞ்சாலைகளில் அரளி செடி ஏன் வளர்க்கிறார்கள்?

by Editor / 02-08-2021 03:12:53pm
தேசிய நெடுஞ்சாலைகளில் அரளி செடி ஏன் வளர்க்கிறார்கள்?

 

வாகனங்களில் இருந்து வெளியேறும் கரியமில வாயுவை இந்த அரளி செடிகள் உள்ளிழுத்துக் கொள்ளும். இதனால் புகை மண்டலம் போன்ற சூழ்நிலை உருவாகாமல் தடுக்கப்படும். இதற்காகத்தான் பைபாஸ் சாலைகளில் இந்த அரளி செடியை வைத்துள்ளனர். மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் மரங்களில் மோதி ஏற்படுத்தும் விபத்துக்களை குறைப்பதற்காகத்தான் பைபாஸ் சாலைகளில் அரளி செடிகளை வைத்துள்ளனர். முதன்முதலாக பைபாஸ் சாலைகள் அமைக்கும்போது சாலைகளின் இருபுறங்களில் இருந்த நிறைய மரங்களை அரசாங்கம் வெட்டி விட்டது.
 
இதனால் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கில், இந்த மரங்களை வெட்டியதற்கு தண்டனையாக அதே சாலைகளில் மரங்கள் நட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பின்னர் தான் நெடுஞ்சாலைகளில் அரளி செடிகளை அதிக அளவில் வளர்க்க ஆரம்பித்தனர். இந்த அரளி செடிகள் சீக்கிரம் காஞ்சு போகாது. பராமரிப்பு செலவும் ரொம்ப குறைவு தான். ஒரு முறை மழை பெய்தாலே அந்த நீரை வைத்து பல மாதங்கள் தாக்குப்பிடிக்கொள்ளும். எனவே அரளி செடி பைபாஸ் சாலைகளில் வைத்து அரசாங்கம் சுலபமாக பராமரித்து வருகிறது.

 

Tags :

Share via