சிறுத்தை நகங்கள், யானை தந்தங்கள்.. சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு
தமிழகத்திலுள்ள காடுகளில் விலங்குகளை கொன்று உடலை கடத்துவது குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நித்திய சௌமியா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், எறும்பு தின்னி ஓடுகள், சிறுத்தை நகங்கள், யானை தந்தங்கள் ஆகியவை கடத்தப்படுவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்றும் இதுகுறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க கோரியும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள், வழக்கு குறித்த மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை துறை இயக்கு நர், தமிழ்நாடு வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பணியகத்தின் இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.பின்னர் விசாரணையை, ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Tags :