பால்வாடியில் கான்கிரீட் பூச்சு விழுந்ததில் குழந்தைகள் காயம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே இயங்கி வரும் அரசு அங்கன்வாடி மையத்தில், கான்கிரீட் பூச்சு பெயர்ந்து, குழந்தைகள் மீது விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள், மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென மேலிருந்து கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில், குழந்தைகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர்கள், பதறியடித்துக்கொண்டு அங்கன்வாடி சென்றுள்ளனர்.
Tags :