அயோத்திதாசப் பண்டிதருக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் நாளை திறப்பு 

by Editor / 30-11-2023 09:30:39am
அயோத்திதாசப் பண்டிதருக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் நாளை திறப்பு 

சென்னை கிண்டி காந்திமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அயோத்திதாசப் பண்டிதரின் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் டிசம்பர் 1ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். தமிழ்நாடு அரசின் சார்பில், அயோத்திதாசப் பண்டிதரின் 175வது ஆண்டு விழாவின் நினைவாக ரூ.2 கோடி 49 லட்சம் மதிப்பீட்டில் சென்னை கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அயோத்திதாசப் பண்டிதரின் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

 

Tags : அயோத்திதாசப் பண்டிதருக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் நாளை திறப்பு 

Share via

More stories

Logo