தூய பனியமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா மாற்றம் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து.

by Editor / 25-07-2023 09:19:08pm
தூய பனியமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா மாற்றம் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா இன்று (26.07.2023) கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 05.08.2023 வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

பேருந்து வழித்தட மாற்றம் 25.07.2023 முதல் 02.08.2023 வரை

1.    பழைய பேருந்து நிலையத்திலிருந்து திரேஸ்புரம் செல்லும் டவுண் பேருந்துகள் W.G.C சாலை, இரயில் நிலையம், இந்திராகாந்தி சிலை வழியாக செல்ல வேண்டும்.  

2.    திரேஸ்புரத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் கால்டுவெல் பள்ளி அருகே மேற்கு நோக்கி செல்லும் ரோடு வழியாக 1ம் கேட், 2ம் கேட், 4ம் கேட் வழியாக செல்ல வேண்டும்.

3.    பழைய பேருந்து நிலையத்திலிருந்து முத்தையாபுரம் செல்லும் டவுண் பேருந்துகள் W.G.C ரோடு, பழைய மாநகராட்சி ஜங்ஷன், பையர் சர்வீஸ் ரோடு, அந்தோணியார் கோவில், ஆல்பர்ட் & கோ ஜங்ஷன் வழியாக செல்ல வேண்டும்.

  மாதா கோவில் திருவிழா நாள் 03.08.2023 முதல் 05.08.2023 வரை

1. பழைய பேருந்து நிலையம் முதல் கிழக்கு நோக்கி செல்லும் டவுண் மற்றும் சிறப்பு பேருந்துகள் பழைய மாநகராட்சி ஜங்ஷன், பையர் சர்வீஸ் ரோடு அந்தோணியார் கோவில் வழியாக செல்ல வேண்டும்.

2. பழைய பேருந்து நிலையம் முதல் திரேஸ்புரம் வரை செல்லும் பேருந்துகள் W.G.C  ரோடு, பழைய மாநகராட்சி ஜங்ஷன், காசுக்கடை பஜார், 1ம் கேட், மட்டக்கடை, திரேஸ்புரம் வழியாக செல்ல வேண்டும்.

3. திரேஸ்புரத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் பக்கிள் ஓடை அருகில் உள்ள ரோடு வழியாக கருப்பட்டி ஆபிஸ் ஜங்ஷன், 4ம் கேட் வழியாக செல்ல வேண்டும்.

4. புதிய துறைமுகம் தெர்மல்நகரிலிருந்து வரும் பேருந்துகள் நகர் விலக்கு, திருச்செந்தூர் ரவுண்டானா வழியாக காமராஜ் கல்லூரி, புதுக்கிராமம், தேவர்புரம் ரோடு வந்து செல்ல வேண்டும்.

5. கனரக, சரக்கு வாகனங்கள் திருவிழா நடைபெறும் பகுதிகளில்  வருவதற்கு முற்றிலும் அனுமதி இல்லை.

6. W.G.C  ரோட்டிலிருந்து பழைய துறைமுகம், மாதா கோவில் வழியாக தெற்கு பீச் ரோடு செல்லும் வாகனங்கள் திருவிழா காலங்களில் அனுமதிக்கப்படமாட்டாது. அவ்வாறு செல்லும் வாகனங்களுக்கு மாற்றுப்பாதையாக பழைய மாநகராட்சி ஜங்ஷன், பையர் சர்வீஸ் ரோடு, PPMT ஜங்ஷன், லயன்ஸ்டவுண், ரோச் காலனி, SRM ஹோட்டல் வழியாக தெற்கு பீச் ரோடு செல்ல வேண்டும். திருவிழா கூட்டம் அதிகமாக இருக்ககும்பட்சத்தில் பையர் சர்வீஸ் ஜங்ஷனிலிருந்து V.E ரோடு வழியாக காமராஜ் கல்லூரி, திருச்செந்தூர் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.
  
7. இந்திரா காந்தி சிலை வழியாக பழைய துறைமுகம், மாதா கோவில் வழியாக தெற்கு பீச் ரோட்டில் செல்லும் வாகனங்கள் திருவிழா காலங்களில் அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாறு செல்லும் வாகனங்களுக்கு மாற்று பாதையாக இந்திராகாந்தி சிலையிலிருந்து காசுக்கடை பஜார், பழைய மாநகராட்சி ஜங்ஷன், பையர் சர்வீஸ் ஜங்ஷன், PPMT ஜங்ஷன், லயன்ஸ்டவுண், ரோச் காலனி, SRM ஹோட்டல் வழியாக தெற்கு பீச் ரோடு செல்ல வேண்டும்.

8. PPMT ஜங்ஷன், பெல் ஹோட்டல் ஜங்ஷன் வழியாக தெற்கு பீச் ரோட்டில் செல்லும் வாகனங்கள் திருவிழா காலங்களில் அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாறு செல்லும் வாகனங்களுக்கு மாற்றுப்பாதையாக PPMT ஜங்ஷன் லயன்ஸ்டவுண், ரோச் காலனி, SRM ஹோட்டல் வழியாக தெற்கு பீச் ரோடு செல்ல வேண்டும்.

தூத்துக்குடி தூய பனிமய மாதா கோவில் தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு திருவிழா நடைபெறும் நாட்களில் தேவைக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றி அமைக்கப்படும், திருவிழா சிறப்பாக நடைபெற பொதுமக்கள் காவல்துறைக்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுத்து உதவுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

 

Tags :

Share via