10 தோல்விகளைக் கண்ட ஒருவர் என்னைப்பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார். முதலில் அவர் சேலம் பக்கத்தில் உள்ள தொகுதியில் பதுங்கிக் கொள்ளாமல்
இன்று ஒய்.எம். சி.ஏ மைதானத்தில் கட்சியின் நிர்வாகிகள் இடையே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் காரசாரமாக- ஆவேசமாக தன்னுடைய கோபத்தை வார்த்தைகளாக கொட்டினார். அதுவும் இதுவரை அதிமுக தலைமை மீது பகிரங்கமாக எந்த குற்றச்சாட்டையும் சொல்லாமல் இருந்த அவர் இன்று வெளிப்படையாக எடப்பாடி பழனிச்சாமியை பெயரைச் சொல்லாமல் தொகுதியை மட்டும் சொல்லி மற்றும் பலர் என்ற விமர்சனத்தோடு அவரை தாக்கினார். விஜய் மக்களை சந்திக்க வராமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடப்பவர் என்று 10 தோல்விகளைக் கண்ட ஒருவர் என்னைப்பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார். முதலில் அவர் சேலம் பக்கத்தில் உள்ள தொகுதியில் பதுங்கிக் கொள்ளாமல் வேறு ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற்ற பின்னர் என்னை பற்றி பேசட்டும். எடப்பாடியில் நம் சின்னத்தை களவாடிக் கொண்டவர். அதனால் தான் நம்முடைய மன்றத்திலே ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து பயணித்து வந்த ஒருவரை சுயேட்ச்சியாக வேட்பாளராக நிற்கும் ஒருவரை அவருடைய டெலிவிசன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அது நம்மளுடைய விசில் சின்ன மாதிரி நினைத்துக் கொண்டு நம்மளுடைய கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் அந்த எடப்பாடி தொகுதியில் போட்டியிடக் கூடிய அவரை வெற்றியடைய செய்ய வேண்டும் என்று நாம் அவருக்காக ஆதரவு கொடுத்துள்ளோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக தாக்கினார்.
Tags :


















