இன்று தன் தொகுதியில் முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

by Admin / 21-04-2026 05:31:31pm
 இன்று தன் தொகுதியில் முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்  பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் இன்று தன் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் மக்களிடையே வாக்கு கேட்டு வருகிறார். ஜி கே எம் காலனி வழியாக வந்து பெரவள்ளூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்ய உள்ளார். கொளத்தூர் தொகுதி 2011 இல் தொடங்கப்பட்டதிலிருந்து சட்டமன்ற உறுப்பினராவும் துணை முதலமைச்சராகவும் முதலமைச்சராகவும் இருந்து வரும் முதலமைச்சர் மீண்டும் தொகுதியில் போட்டியிடுகின்றார். கடந்த ஒரு மாதமாக தமிழக முழுவதும் உள்ள 233தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பரப்புரை மேற்கொண்டு இருந்தவர் இன்று தன் தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். கொளத்தூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து இருக்கின்ற முதலமைச்சர் வாக்களியுங்கள் என்று கட்சியினர் உற்சாகத்துடன் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo