நிராகரிக்கப்பட்டோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நிராகரிக்கப்பட்ட 56.60 லட்சம் பேருக்கு காரணங்கள் இன்று முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும், காரணங்களை அறிந்துகொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களை நேரில் அணுகலாம் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Tags :