பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் ஜெர்மனிக்கு மூன்று நாள் அரசு முறை பயணம்.

by Admin / 22-04-2026 01:50:11am
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் ஜெர்மனிக்கு மூன்று நாள் அரசு முறை பயணம்.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் ஜெர்மனிக்கு மூன்று நாள் அரசு முறை பயணம்.சுமார் 90,000 கோடி முதல் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான ஆறு மேம்பட்ட நீர் மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக சென்றிருக்கிறார். இந்த நீர் மூழ்கிக் கப்பல்கள் மேக்கின் இந்தியா திட்டத்தின் கீழ் ஜெர்மனியின் திஸ் சென்ட் க்ரூப் மெரைன் சிஸ்டம்ஸ் மற்றும் இந்தியாவின்  கப்பல் கட்டும் தளம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் மும்பையில் தயாரிக்கப்பட உள்ளது.  இவை காற்றில்லா  விசை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு அதிக நேரம் நீருக்கு அடியில் பயணிக்க கூடிய கப்பலாக உருவாக்கப்பட உள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர்ராஜ் நாத் சிங்  ஜெர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சர் பிஸ்டோரியஸை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொழில் ஒத்துழைப்புக்கான வரைபடத்தை இறுதி செய்வார்கள். ஏழு ஆண்டுக்கு பிறகு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் ஜெர்மனிக்கு சென்றிருப்பது இது முதல் முறை என்று சொல்லப்படுகிறது.

 

Tags :

Share via
Logo