காதலித்து ஏமாற்றியதால் பெண் தற்கொலை முயற்சி-ஊர்க்காவல் படைவீரர் கைது

by Admin / 14-08-2021 03:30:55pm
காதலித்து ஏமாற்றியதால் பெண் தற்கொலை முயற்சி-ஊர்க்காவல் படைவீரர் கைது

புகாரின் பேரில் மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜோதிகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருப்பூர் அவினாசி சாலை முருங்கம்பாளையத்தை சேர்ந்தவர் ஜோதிகிருஷ்ணன் (வயது 29). திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படை வீரராக உள்ளார்.

பிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் துர்காதேவி (25). இவர் முன்பு ஊர்க்காவல் படையில் பணியாற்றிய போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.  

கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் துர்கா தேவி, காதலன் ஜோதிகிருஷ்ணாவை சந்தித்து திருமணம் செய்து கொள்ளு மாறு தெரிவித்துள்ளார். ஆனால் ஜோதிகிருஷ்ணன் மறுத்துள்ளார்.  

மேலும் பணம் உள்ளிட்டவற்றை துர்காதேவியிடம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் மன விரக்தியடைந்த துர்காதேவி கடந்த 11-ந்தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இது குறித்து துர்காதேவி திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜோதி கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories