ஹமாஸ் தலைவர்கள் பணய கைதிகள் விடுதலை ஆவதற்கு தடையாக உள்ளனா்-.இஸ்ரேலிய பிரதமர் நெதன் யாகு

இஸ்ரேலிய பிரதமர் நெதன் யாகு கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்கள் பணய கைதிகள் விடுதலை ஆவதற்கு தடையாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.. ஹமாஸ் தலைவர்கள் கத்தாரில் வசித்து இயக்கத்தை நடத்தி வருவதின் காரணமாக காசாவின் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் பணயகைதிகளை விடுவிப்பதற்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பான தகவலை இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். கமாஸ் தலைவர்களை ஒழிக்கும் பொருட்டு இஸ்ரேல் கத்தார் மீது கடந்த வாரம் தாக்குதலை தொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.. அமெரிக்காவின் ஆதரவால் அனைத்து முடிவுகளையும் இஸ்வேல் எடுத்து வருகையில் கத்தார் மீதான தாக்குதல் அமெரிக்க நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்படவில்லை என்கிற செய்தியும் வெளிவந்துள்ளது., இருப்பினும் ,அமெரிக்காவின் ஒப்புதல் இன்றி இஸ்ரேல் செயல்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கத்தார் தாக்குதல் அரபு நாடுகளை யோசிக்க வைத்திருக்கிறது.
Tags :