தவெக பொதுக்குழு.. முடிவானது தேதி மற்றும் இடம்

கடந்தாண்டு பிப். 02 ஆம் தேதி நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை அறிவித்தார். அதன் பிறகு விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாட்டையும் நடத்தினார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் பிப். 26ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, ஈசிஆரில் உள்ள தனியார் கன்வென்ஷன் சென்டரில் தவெக ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
Tags :