இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ள சவுதி அரேபியா

by Editor / 23-04-2025 05:21:06pm
இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ள சவுதி அரேபியா

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப். 22) சவுதி அரேபியா சென்றார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து அவர் இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். இந்நிலையில், பிரதமரின் சவுதி அரேபியா பயணத்தால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்த பட்டியலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via