தாமிரபரணி நதியில் 15 ஆயிரம் கனஅடிநீர் செல்கிறது.
திருநெல்வேலி மாவட்டம், முழுவதும் நேற்று முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் தாமிரபரணி நதியில் சென்று குளிக்க தடை விதிக்க பட்டுள்ளது, என்றும் நீர் நிலைகளின் அருகில் சென்று செல்ஃபி எடுக்க வேண்டாம் என்றும் கரையோர பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதி க்குச் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்டம் பாபநாசம் மற்றும் சேர்வலாறு பகுதிகளில் நீரால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் தாமிரபரணி நதியில் 15 ஆயிரம் கனஅடிக்கு அதிகமாக நீ செல்வதால் யாரும் நதிகள் அருகில் செல்ல வேண்டாமென அறிவிப்பு.
Tags :