பாஜக-வில் நடிகை கஸ்தூரி.

தமிழ் திரையுலகில் 90-ஆம் ஆண்டு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், நடிகை கஸ்தூரி. தற்போது தமிழ். தெலுங்கு மொழி படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் கஸ்தூரி அவ்வப்போது சினிமா மற்றும் அரசியல் தொடர்பான கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
Tags : நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி.