அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் இந்தியா மீது விதித்திருந்த கூடுதல் அபராத வரியை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

by Editor / 08-02-2026 01:01:18am
அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் இந்தியா மீது விதித்திருந்த கூடுதல் அபராத வரியை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் இந்தியா மீது விதித்திருந்த கூடுதல் அபராத வரியை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளார். ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத கூடுதல் அபராத வரி சனிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய பொருள்கள் மீதான ஒட்டுமொத்த வரி விகிதம் 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது அமெரிக்காவிலிருந்து ஏரி சக்தி மற்றும் தொழில்நுட்ப பொருள்களை வாங்குவது மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 500 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க பொருள்களை இறக்குமதி செய்வது போன்ற ஒப்பந்தங்களில் இந்த வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஜவுளி, தோல் பொருட்கள், ரசாயனம், ஆபரணங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற துறைகள் இந்த வரி குறைப்பால் பெரும் பலன் அடையும் .மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க மைல்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo