இன்று ஜப்பானின் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.
இன்று ஜப்பானின் பிரதமர் சானே தகைச்சி அழைப்பு விடுத்திருந்த திடீர் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சானே தகைச்சி, பதவியேற்ற சில மாதங்களிலேயே மக்களின் புதிய ஆணையைப் பெறுவதற்காக நாடாளுமன்றத்தைக் கலைத்து இந்தத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் உள்ள மொத்தம் 465 இடங்களுக்கு இந்தத் தேர்தல் நடைபெறுகிறது .கருத்துக்கணிப்புகளின்படி, தகைச்சியின் லிபரல் டெமோக்ரடிக் கட்சி மற்றும் ஜப்பான் இன்னோவேஷன் கட்சி கூட்டணி 300- க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி பெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக வாக்குப்பதிவு சதவீதம் சற்று பாதிக்கப்படலாம் .. பிரதமர் சானே தகைச்சிக்கு இந்தத் தேர்தல் ஒரு முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்காப்புச் செலவுகளை அதிகரித்தல், வரி குறைப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு பொதுமக்களின் ஆதரவை உறுதி செய்ய வழி செய்யும் என்று நம்புகிறாா்.
Tags :



















