கேப்பை புட்டு சாப்பிட்ட பெண்கள் உட்பட 10 பேர் வாந்தி மயக்கத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி.

கேப்பை புட்டு சாப்பிட்ட 5 வயது குழந்தை மற்றும் பெண்கள் உட்பட 10 பேர் வாந்தி மயக்கத்துடன் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளபட்டி காந்திஜி தெரு பகுதியை சேர்ந்த சிலர் கேப்பை புட்டு தயார் செய்து அருகில் இருந்தவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார்.
இதில், 5 வயது பெண் குழந்தையான சஷ்டிகா, முத்துலெட்சுமி(35), மகாலெட்சுமி (20), பஞ்சு (60), மூக்கம்மாள் (45), சோலைஈஸ்வரி (25), சங்கீதா (28), பார்வதி . முருகேசன் (56) மற்றும் சதீஸ்பிரபு (26) ஆகியோர் வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளனர்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அனைவரும் மீட்கப்பட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
Tags :