வெற்றி பெற்ற கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு

by Staff / 04-06-2024 04:36:20pm
வெற்றி பெற்ற கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு

மக்களவை தேர்தலில் திமுக எம்பி கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட்டார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் விஜயசீலன், நாம் தமிழர் கட்சியின் ரொவினா ரூத் ஜென் ஆகியோர் தூத்துக்குடியில் போட்டியிட்டனர். இதில் கனிமொழி தொடக்கம் முதலே முன்னிலை வகித்த நிலையில் 2,83,690 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து தூத்துக்குடியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண் தொண்டர்கள் நடனமாடியும், மாலை அணிவித்தும் அவரை வாழ்த்தினார்கள்.

 

Tags :

Share via

More stories

Logo