கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகிணி புகார்
சமூகவலைதள பயனாளி கிஷோ கே. சாமி மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் இரண்டு வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை ரோகிணி ஆன்லைன் மூலம் காவல்துறையில் கிஷோர் கே சாமி மீது புகார் அளித்துள்ளார் .
கிஷோர் கே சாமி என்பவர் மீது நடிகை ரோகிணி சென்னை காவல்துறையிடம் ஆன்லைனில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: தன்னைப் பற்றியும் மறைந்த தனது கணவர் ரகுவரன் பற்றியும் பேஸ்புக்கில் கிஷோர் கே சாமி அவதூறு பரப்பி உள்ளதாக அவர் தனது புகாரில் ரோகிணீ குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கிஷோர் கே சாமி, அதனையடுத்து பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது நடிகை ரோகிணியும், கிஷோர் கே ஸ்வாமி மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :