சமையல் எண்ணெய் விலை சரிவு

by Editor / 17-06-2021 04:19:22pm
சமையல் எண்ணெய் விலை சரிவு


 

பல்வேறு சமையல் எண்ணெய்களின் விலைகள் இந்தியாவில் குறையத் தொடங்கி உள்ளன. நுகர்வோர் விவகாரங்கள் துறையின் தரவுகளின் படி, கடந்த ஒரு மாத காலமாகச் சமையல் எண்ணெய்களின் விலைகள் குறைந்து வருகின்றன.
மும்பை மாநகரத்தின் விலைகளைப் பார்க்கும் போது, சிலவற்றின் விலைகள் சுமார் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரியவருகிறது.2021 மே 7 அன்று ஒரு கிலோ 142 ரூபாயாக இருந்த பாமாயிலின் விலை தற்போது 115 ரூபாய் என 19 சதவீதம் குறைந்துள்ளது.2021 மே 5 அன்று ஒரு கிலோ 188 ரூபாயாக இருந்த சூரியகாந்தி எண்ணெய்யின் விலை தற்போது 157 ரூபாய் என 16 சதவீதம் குறைந்துள்ளது.2021 மே 20 அன்று ஒரு கிலோ 162 ரூபாயாக இருந்த சோயா எண்ணெய்யின் விலை தற்போது 138 ரூபாய் என 15 சதவீதம் குறைந்துள்ளது.2021 மே 16 அன்று ஒரு கிலோ 175 ரூபாயாக இருந்த கடுகு எண்ணெய்யின் விலை தற்போது 157 ரூபாய் என சுமார் 10 சதவீதம் குறைந்துள்ளது.2021 மே 14 அன்று ஒரு கிலோ 190 ரூபாயாக இருந்த கடலை எண்ணெய்யின் விலை தற்போது 174 ரூபாய் என 8 சதவீதம் குறைந்துள்ளது.
2021 மே 2 அன்று ஒரு கிலோ 154 ரூபாயாக இருந்த வனஸ்பதியின் விலை தற்போது 141 ரூபாய் என 8 சதவீதம் குறைந்துள்ளது.

 

Tags :

Share via