1000 கிலோ புகையிலை மற்றும் ரூ3.34.000 பறிமுதல்

by Staff / 18-04-2024 01:46:12pm
1000 கிலோ புகையிலை மற்றும் ரூ3.34.000 பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கோவில்பட்டி நான்கு வழிச்சாலை தோட்டிலோவன்பட்டி பகுதியில் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாக்கியராஜ் வாகன தனிக்கையில் இருந்த போது அந்த வழியாக வந்த மினி கண்டெனர்லாரியை மடக்கி சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.பின்னர் புகையிலை கடத்தி வந்த லாரி அதில் இருந்தவர்களை பிடித்து வந்து சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்ததில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வந்தது தெரியவந்தது. பின்னர் விசாரணையில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த ஹபிப் (30), சபில்(38), லாரி டிரைவர் சாத்தூர் அருகே ஓ. மேட்டுப்பட்டியை சேர்ந்த குமாராவேல்(39)ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 1000கிலோ புகையிலை, மற்றும் பணம் ரூ. 3லட்சத்து 34 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo