பைக்கில் கொண்டு சென்ற தங்க நகைகள் மாயம்
மதுரை குலமங்கலம் மெயின் ரோட்டில் பைக்கில் கொண்டு சென்ற 60 பவுன் தங்க நகைகள் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு நந்தவனம் பகுதியை சேர்ந்தவர் அய்யங்காளை மகன் செல்வேந்திரன் 34. இவருடைய மாமனாரின் 60 பவுன் நகைகள் இவரிடம் இருந்தன. இதை அவர் பைக்கில் மாமனாரிடம் கொடுப்பதற்காக பைக்கில் கொண்டு சென்றார். இவர் குலமங்கலம் மெயின் ரோடு மகாத்மா காந்தி நகர் அருகே சென்றபோது பைக்கில் வைத்திருந்த நகையை சோதனை செய்தார்.அப்போது அது மாயமானது தெரியவந்தது. பைக்கில் வைத்து இருந்த நகைகள் எப்படி மாயமானது என்று தெரியவில்லை. பைக்கில் இருந்து தவறி விழுந்ததா? அல்லது வேறு யாரும் திருடிச் சென்று விட்டனரா என்றும் தெரியவில்லை. இது குறித்து செல்வேந்திரன் செல்லூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து நகை மாயமானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :














.jpg)


.png)
