திருவிழாவில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு

by Staff / 05-04-2023 03:42:07pm
திருவிழாவில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி  முதல்வர் மு. க. ஸ்டாலின்  அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோயில் திருவிழாவின்போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தும், நிதியுதவி அறிவித்தும் முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோயில் தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக இன்று காலை 9. 30 மணியளவில், கோயில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி, சூர்யா (வயது-22), பானேஷ் (வயது-22), ராகவன் (வயது-22), யோகேஸ்வரன் (வயது-21) மற்றும் ராகவன் (வயது-18) ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். " இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via