கஞ்சா பிசினஸ் செய்த பெண் ஐடி ஊழியர் கைது
சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில், போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட விடுதிக்குச் சென்ற போலீசார், ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவரது அறையில் இருந்த 1.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவரது நண்பரும் கால் டாக்சி ஓட்டுநருமான சுரேஷ் என்பவருடன் சேர்ந்து கஞ்சா பிசினஸ் செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, சுரேஷ் மற்றும் ஷர்மிளா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Tags :