9 மாதங்களுக்குப் பிறகு பூமியின் காற்றை சுவாசித்த சுனிதா வில்லியம்ஸ்.

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ்-ன் டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய 4 விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.
17 மணி நேர பயணத்துக்கு பிறகு ஸ்பேஸ் எக்ஸ்-ன் டிராகன் விண்கலம் ஃபுளோரிடா கடற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.கடலில் விழுந்த டிராகன் கேப்சூலை படகு மூலம் மீட்டு, விண்வெளி
வீரர்களை பத்திரமாக அழைத்து சென்றது ஸ்பேஸ் X, நாசா குழு,
பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மிக ஆரோக்கியமாக உள்ளனர். இருவரையும் பரிசோதித்த பின் நாசா அறிவியலாளர்கள் அறிவிப்பு.
குஜராத்தில் சுனிதா வில்லியம்ஸ் பிறந்த சொந்த ஊரான மெஹ்சானாவில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாட்டம்.
Tags : விண்வெளியில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!