திரிபுராவில் கொலை செய்து தப்பி திண்டுக்கல்லில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் கைது செய்து ஒப்படைத்தனர்.

by Editor / 19-03-2025 09:55:50am
திரிபுராவில் கொலை செய்து தப்பி திண்டுக்கல்லில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் கைது செய்து  ஒப்படைத்தனர்.

திரிபுராவை சேர்ந்தவர் ரியாங்(27) பிப்ரவரியில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்து விட்டு சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 2 மாதமாக சுற்றித்திரிந்த ரியாங்கை அம்மாநில போலீசார் பிடிக்க முடியாமல் திணறினர். இந்நிலையில் ரியாங் திண்டுக்கல் ரவுண்ட்ரோடு எழில் நகர் பகுதியில் சுற்றியுள்ளார் திரிபுரா போலீசார் திண்டுக்கல் போலீசாரிடம் உதவி கோரினர். திண்டுக்கல் போலீசார் ரியாங்கின் அலைபேசி எண்ணை வைத்து அவரை கைது செய்து திண்டுக்கல் வந்த திரிபுரா போலீசாரிடம் ரியாங்கை, ஒப்படைத்தனர்.

 

Tags : திரிபுராவில் கொலை செய்து தப்பி திண்டுக்கல்லில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் கைது செய்து ஒப்படைத்தனர்.

Share via