தக்கலை மாணவிகள் பலாத்கார விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது பலருக்கும் தொடர்பு.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சலை சேர்ந்த சகோதரிகளான இரண்டு மாணவிகள் இன்ஸ்டா காதலனை பார்ப்பதற்காக இரவில் தனியாக வந்தனர்.அவர்களை பைக்கில் அழைத்துச்சென்ற வழக்கறிஞர் அஜித் குமார் தக்கலையில் தனது அலுவலகத்தில் வைத்து ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நான்கு நாட்களுக்கு பின்னர் மாணவிகள் மீட்கப்பட்ட நிலையில் அஜித் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
மாணவிகள் இரண்டு பேரும் இன்ஸ்டாகிராம் மூலம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது அவரைப் பார்ப்பதற்கு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மற்றொரு இன்ஸ்டா நண்பர் மோகன் (30), உதவுவதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் மாணவிகள் இருவரும்
மோகனை சந்தித்துள்ளனர் அவர் திருநெல்வேலியில் ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் சிலர் கைதாக வாய்ப்பு உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Tags : தக்கலை மாணவிகள் பலாத்கார விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது பலருக்கும் தொடர்பு.