தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடக்கம்

by Staff / 11-02-2024 03:24:49pm
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடக்கம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். கடந்த முறை ஆளுநர் உரையை மாற்றி வாசித்ததால் அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 2024-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் நாளை தொடங்குகிறது. அரசுக்கும் ஆளுநருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு அவையில் பிரதிபலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது

 

Tags :

Share via

More stories

Logo