அயோத்தியில் கட்டப்பட்டுள்ள குழந்தை ராமன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி கோபுரத்தின் உச்சியில் உள்ள கொடி கம்பத்தில் காவி கொடியை ஏற்றி வைத்தார்...
இன்று உத்தர பிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள குழந்தை ராமன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி ஆராத்தி எடுத்து பூஜை செய்து வழிபட்டார்.. அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததன் பொருட்டு அங்கு கொடியேற்றி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ராமர் கோவிலுக்கு சென்று இருந்தார். அபிஜித் முகூர்த்தத்தின் போது நடைபெற்றது ..பிற செயல்பாடுகள் : கொடியேற்றத்திற்கு முன், பிரதமர் ராம் தர்பார் கர்ப்ப கிரஹத்திலும், ராம் லல்லா கர்ப்ப கிரஹத்திலும் பூஜை செய்தார் . வளாகத்திற்குள் உள்ள பிற கோயில்களையும் பார்வையிட்டார்.அவருக்கு கோயில் இறை பணியாளர்கள் பூஜை செய்து வழிபாட்டுப் பொருட்களை வழங்கியதோடு பிரதமரும் ஆரத்தி எடுத்து வழிபட்டு பின்னர் நிறைவடைந்த கோயில் பணிகளை பார்வையிட்டு கோபுரத்தின் உச்சியில் உள்ள கொடி கம்பத்தில் காவி கொடியை ஏற்றி வைத்தார்....பொது மக்கள் வருகை : விழா மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக, நவம்பர் 25, 2025 அன்று பிற்பகல் 2:30 மணி வரை பொது கோயில் நுழைவு மூடப்பட்டது, அதன் பிறகு பொதுமக்களுக்கான தரிசனம் மீண்டும் தொடங்கியது..
உ.பிமுதல்வா்யோகிநாத் ஆதித்யா, ஆளுனர் ஆனந்திபென்,ஆரெஸெஸ்தலைவா் உள்ளிட்டோா்கலந்து கொண்டனா்.
Tags :


















