கிரிப்டோகரன்சி பயன்பாட்டுக்கு தடை விதிக்கலாமா?

by Editor / 14-11-2021 08:12:32pm
கிரிப்டோகரன்சி பயன்பாட்டுக்கு தடை விதிக்கலாமா?

 

கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணய பயன்பாட்டுக்கு தடை விதிப்பது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
 
கிரிப்டோகரன்சி தொடர்பாக ரிசர்வ் வங்கி, மத்திய உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவை தனித்தனியாக ஆலோசனைகளை நடத்தி உள்ளன.

பல்வேறு நாடுகளில் உள்ள நடைமுறைகள், அதில் உள்ள சாதகம் மற்றும் பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கண்ணுக்குத் தெரியாத இந்த கிரிப்டோகரன்சி பயன்பாட்டில் உள்ள ஆபத்து குறித்து விவாதிக்கப்பட்டது.

கட்டுப்பாடு எதுவும் இல்லாத இந்த சந்தையின் மூலம் பண மோசடி மற்றும் பயங்கரவாத சம்பவங்களுக்கு உதவ அதிக வாய்ப்பு உள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மையற்ற விளம்பரங்கள் மூலம் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும் என விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் கிரிப்டோகரன்சி பயன்பாட்டுக்கு தடை விதிக்க அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

 

Tags :

Share via