எம்பிபிஎஸ் மாணவி மரணம் சக மாணவர் கைது

by Staff / 23-03-2023 12:21:58pm
எம்பிபிஎஸ் மாணவி மரணம் சக மாணவர் கைது

கேரளாவின் மலப்புரம் திருர்க்காட்டில் பைக்குகள் மோதிய விபத்தில் எம்பிபிஎஸ் மாணவி உயிரிழந்தார். பெரிந்தல்மன்னா எம்இஎஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்த அல்போன்சா (22) உயிரிழந்தார். இந்த விபத்தில் அல்போன்சாவுடன் இருந்த திருச்சூரை சேர்ந்த அஷ்வின் என்ற சக மாணவர் படுகாயம் அடைந்தார். அவர் பெரிந்தல்மன்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திங்கள்கிழமை காலை 6.50 மணியளவில், கோழிக்கோடு-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது, ​​அவர்கள் சென்ற பைக் மற்றொரு பைக் மற்றும் பேருந்து மீது மோதியது. கவனக்குறைவாக பைக் ஓட்டிய அஷ்வின் கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via