ஆறாய் ஓடிய சாராயம்

by Staff / 21-10-2023 02:24:02pm
 ஆறாய் ஓடிய சாராயம்

வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அல்லேரி மலை கருப்பண்ணன்கொள்ளை பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது சட்டவிரோதமாக சின்டெக்ஸ் டேங் மற்றும் பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய ஊரல்கள் சுமார் 1000 லிட்டர் கண்டுபிடிக்கப்பட்டு போலீசாரால் கீழே கொட்டி அழிக்கப்பட்டது. அப்போது சாராயம் ஆறாக ஓடியது.

 

Tags :

Share via

More stories