கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது.

by Editor / 14-02-2023 09:23:16am
கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில்  ஈடுபட்டு வந்த காசித்துரை  தலைவனார் என்ற கார்த்தி மற்றும் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில்  ஈடுபட்டு வந்த சுப்புக் குட்டி என்ற கார்த்தி ஆகிய இரண்டு நபர்கள் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரனுக்கு பரிந்துரை செய்தார்.அவரது பரிந்துரையைத்தொடர்ந்து   இரண்டு நபர்களும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதற்கான தடுப்பு காவல் உத்தரவு ஆணையை  பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர்கள் சமர்ப்பித்தனர்.

 

Tags :

Share via
Logo