நடிகர் தீரஜ்குமார் உடல்நலக்குறைவால் காலமானார்

by Editor / 15-07-2025 02:28:10pm
நடிகர் தீரஜ்குமார் உடல்நலக்குறைவால் காலமானார்

பாலிவுட் நடிகர் தீரஜ்குமார் உடல்நலக்குறைவால் தனது 79வது வயதில் மும்பையில் இன்று (ஜூலை. 15) காலமானார். நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தோடு திகழ்ந்த அவர் சின்னத்திரையிலும் தடம்பதித்துள்ளார். நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. தீரஜ்குமாரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via