ஈரானில் நிலநடுக்கம்!

by Editor / 20-04-2021 11:51:49am
ஈரானில் நிலநடுக்கம்!

ஈரானில் திடீரென்று உருவான நிலநடுக்கத்தினால் அணுஉலைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. ஈரான் தெற்குப் பகுதியில் நேற்று புஷேர் நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்த ஈரான் புவியியல் மையம் திடீரென்று உருவான இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாக தகவல் கூறியுள்ளனர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்ககம் ஏற்பட்ட பகுதியிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில்தான் அணு உலை அமைந்திருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தினால் அணு உலைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ஈரான் அரசு கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து புஷேர் நகரில் உள்ள அணு உலை சுமார் ரிக்டர் 8 வரையிலான நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி கொண்டது என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது

Tags :

Share via