எஸ்.எஸ்.எல்.வி விண்ணில் ஏவப்பட்டது நமக்கு கிடைத்த மகத்தான வெற்றி - முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்.

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் சாமி தரிசனம் செய்தபின் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் தெரிவித்ததாவது:சிறிய எடை கொண்ட சேட்டிலைட்டுகளை வின்னில் நிறுத்த இந்த வகையான ராக்கெட்டுகள் பேருதவியாக இருக்கும்,நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் திட்டத்திற்கான பல்வேறு சோதனைகள் நடைபெற்று வருகிறது சோதனைகள் முடிந்தபின் அதற்கான பணிகள் ஆரம்பமாகும், மத்திய அரசு மாணவர்களுக்கு வின்வெளித்துறையில் பல்வேறு திட்டங்களை கொண்டுவருகிறது. அதனை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
Tags :