சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு - சிஆர்பிஎஃப் வீரர் காயம்

by Staff / 07-11-2023 11:33:07am
சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு - சிஆர்பிஎஃப் வீரர் காயம்

சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்டமாக 20 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் அதிகம் இருக்கும் மாநிலமாக சத்தீஸ்கர் உள்ளது. 20 தொகுதிகளுக்கு உள்பட்ட 5,304 வாக்குப் பதிவு மையங்களில் 60,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

 

Tags :

Share via

More stories

Logo