தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ வேலுவுக்கு எதிராக தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு. நெடுஞ்சாலைத் துறையில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் அமைச்சர் மேலும் இது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. அவர் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றதை தொடர்ந்து தேடப்படும் நபராக அறிவித்து காவல்துறை லுக் அவுட் நோட்டீசை பிறப்பித்து இருந்தது இதனை எதிர்த்து எ.வ வேலு தரப்பு தொடர்ந்த வழக்கில் லுக் அவுட் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து ஜூலை 15 அன்று விசாரணைக்கு ஆஜராகும் படி உத்தரவிட்டிருந்தது இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது உயர் நீதிமன்றம் முறையாக ஆய்வு செய்யாமல் லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு எ.வ.வேலு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ள இலையில் மேல் முறையீடு மனு மீதான வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என்று கூறி தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Tags :


















