சட்டமன்றச் செயலாளர் ,சி. விஜயபாஸ்கருக்கும் எம் .ஆர். விஜயபாஸ்கருக்கும் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம்உத்தரவு
அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி. விஜயபாஸ்கர், கரூர் பகுதியில் வெற்றி பெற்ற எம். ஆர். விஜயபாஸ்கர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இவர்களின் ராஜினாமாவை சட்டப்பேரவை தலைவர் ஏற்றுக்கொண்டார். பேரவை தலைவரின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிராக அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்யக்கோரி ரிட் மனு தாக்கல் செய்தார். இவர்களை கட்சி காவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ள போது சபாநாயகர் அவசர கதியில் ராஜினாமா ஏற்றுக்கொண்டது சட்டப்படி தவறு என்றும் கரூர் மற்றும் விராலிமலை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை இந்திய தேர்தல் ஆணையம் அங்கு தேர்தலை அறிவிக்க கூடாது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சட்டமன்றச் செயலாளர் ,சி. விஜயபாஸ்கருக்கும் எம் .ஆர். விஜயபாஸ்கருக்கும் உத்தரவிட்டது
Tags :



















