த.வெ.க அரசு குதிரைபேர ,ரீல்ஸ் வேலைகளை விட்டுவிட்டு நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்துக என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். வாழ்க்கையில், தமிழக அரசு குதிரையின் பேரம் பேசுவதையும் சமூக ஊடங்களில் கிரல்ஸ் போடுவதையும் விடுத்து விவசாயிகளின் நலனுக்காக நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் மேகலாது அணை திட்டத்தை செயல்படுத்த கூறவில்லை மாறாக முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் காவேரி மற்றும் அதன் துணை ஆறுகளை புத்துயிர் பெற செய்தல் மாசுபடுவதில் இருந்து மீட்டெடுத்தல் மற்றும் விவசாயிகளின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும் என்றும் ரூபாய் 11,250 கோடி மதிப்பீட்டில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டதாகவும் தமிழக வெற்றிக்கழக அரசு இதை செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனங்களை வைத்துள்ளார். அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக வெற்றிக்கழக அரசு தங்களது கட்சிக்கு இருப்பதாக குற்றம் சாட்டி அதற்கு எதிராக அதிமுகவினர் ஆளுநர் இடமும் புகார் அளித்துள்ளனர் என்றும் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் வெறும் சினிமா பாணி பஞ்ச் டயலாக் பேசுவதிலும் சமூக ஊடகங்களில் விளம்பரம் தேடுவதிலும் மட்டுமே தற்போதைய முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டினால் தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் என்றும் எனவே மேகதாது திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்றும் தமிழகத்தின் நீர் உரிமைகளை பாதுகாக்க தமிழக வெற்றிக்கழக அரசு கர்நாடகாவிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தன் கருத்தை வலியுறுத்தி உள்ளார்.
Tags :



















