இன்னும் ஒரு மணி நேரத்தில் விஜய் ஆளுநரை சந்தித்து மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோர  உள்ளார்.

by Admin / 07-05-2026 10:25:54am
 இன்னும் ஒரு மணி நேரத்தில் விஜய் ஆளுநரை சந்தித்து மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோர  உள்ளார்.

 தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நேற்று காலையில் தமிழக வெற்றி கழகம் காங்கிரசோடு கூட்டணி வைத்து ஆளுநரை சந்தித்து இன்று பதவி ஏற்கும் என்கிற சூழல் நிலவியதில், இரவுக்குள் காட்சிகள் அத்தனையும் மாறிவிட்டன. அறுதிபெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தமிழக வெற்றி கழகத்தால் இன்னும் ஆட்சி அமைக்க முடியாத நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் விஜய் ஆளுநரை சந்தித்து மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோர  உள்ளார். நேற்று அவருக்கு அளிக்கப்பட்ட உயர்மட்ட கான்வாய் பாதுகாப்பு வாகனங்கள்  திரும்பப் பெற பெற்றன. அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு முன்பால் வைத்த மெட்டல் டிடெக்டர்  பாதுகாப்பு  கருவியும்  அகற்றப்பட்டதோடு பாதுகாப்பிற்காக  வைக்கப்பட்ட  பேரிக்காடுகளும் அகற்றப்பட்டன. தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று விஜய் தரப்பில் தெரிவித்ததாக துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தகவல் அளித்துள்ளார். ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு வழங்காததனால் மெரினாவில் கட்சியினர் கூடுவதாக கிடைத்த தகவலின் படி காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

 

Tags :

Share via
Logo