தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

by Staff / 13-10-2023 01:12:32pm
தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி, அனைத்து வணிகர் சங்க நகர தலைவரும், பிரபல தொழிலதிபருமான M.B.சுரேஷ் இன்று காலை தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடேஸ்வரா நகைக்கடை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சுரேசுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிருஷ்ணகிரி நகரில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories