கல்லூரி மாணவர்களுக்கு எச்ஐவி குறித்த விழிப்புணர்வு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற இளைஞர் திருவிழா 2023-24 மாநில அளவிலான ரெட் ரன் மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்து, வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் 1994-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதிதொடங்கப்பட்டது. தமிழக அரசு வழங்கிய ரூ. 25 கோடி நிதியுதவியில் இருந்து பெறப்பட்ட வட்டித் தொகையை கொண்டுஎச்ஐவி, எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு உதவி, ஊட்டச்சத்து மிக்க உணவுக்காக செலவிடப்பட்டு வருகிறது.தாயிடமிருந்து குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று பரவுவதை தடுக்க 2, 962 நம்பிக்கை மையங்கள் செயல்படுகின்றன.கடந்த ஏப்ரல் மாதம் முதல்ஆகஸ்ட் மாதம் வரை 11, 51, 142 பொதுமக்களுக்கும், 44, 48, 784 கர்ப்பிணிகளுக்கும் எச்ஐவி ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ. 37. 24 லட்சம் செலவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு எச்ஐவி குறித்து விழிப்புணர்வுஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
Tags :