பாராளுமன்றத் தொகுதி மறு வரையறை மசோதாவிற்கு தி.மு.கவிடம் ஆதரவை பெற பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்

by Admin / 17-07-2026 03:34:43am
பாராளுமன்றத் தொகுதி மறு வரையறை மசோதாவிற்கு  தி.மு.கவிடம் ஆதரவை பெற பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் தொடங்குகிறது. இக்கூட்டத் தொடரில் பாராளுமன்றத் தொகுதி மறு வரையறை மசோதாவிற்கு  திமுகவிடம் ஆதரவை பெற பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பா சிதம்பரம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி திரிண மூல் காங்கிரஸ் கட்சி இடமும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக விடமும் ஆதரவு கேட்டு வருவதாக பதிவு செய்து உள்ளார். ஏப்ரல் கூட்டத்தொடரில் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பாஜக இந்த கூட்டத் தொடரில் கொண்டு வந்து வெற்றி பெற்று விட வேண்டும் என்கிற முனைப்பில் உள்ளதாகவும் தன் காரணமாக திமுகவோடு தொடர்பு கொண்டு உள்ளதாகவும் இதற்கு திமுக தரப்பிலிருந்து முன்பு கொண்டுவரப்பட்ட மசோதாவை நாங்கள் எதிர்த்தோம் தற்போது வரவுள்ள புதிய மசோதாவின் நகரை பார்த்த பிறகு தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. லண்டனிலிருந்து திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு தமிழகத்தின் உரிமைகளையும் கூட்டாட்சி தத்துவத்தையும் பாதிக்கும் எந்த ஒரு சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் திமுக கடுமையாக எதிர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo