செயற்கை நிறமூட்டிகள் மற்றும் ரசாயன சாயங்கள் கலந்த கலர் அப்பளம் ,வத்தல் ,வடாம் வகைகளை விற்பனை செய்ய தடை விதித்துள்ளது-தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை செயற்கை நிறமூட்டிகள் மற்றும் ரசாயன சாயங்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளம் வத்தல் வடாம் வகைகளை விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சந்தைகளில் விற்கப்படும் வண்ண அப்பளங்களின் ஆபத்தான துணி சாயங்களான ரோட மின் மெட்டானில் எல்லோ போன்ற வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஆய்வக சோதனைகளில் உறுதி செய்யப்பட்டதனால் அதை உணவு பாதுகாப்புத் துறை விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளது. கலர் அப்பளங்களை அடிக்கடி சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள் மற்றும் வயிற்றுப்புண் கடுமையான கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் புற்றுநோய் ஏற்படும் நிலை குழந்தைகளுக்கு தோல் அலர்ஜி மற்றும் கவனச் சிதறல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதின் காரணமாக உள்ளூர் சந்தைகள் கடைகள் சுற்றுலா தளங்கள் மற்றும் பொருள் காட்சிகள் போன்ற பொது இடங்களில் கலர் அப்பா காலங்களை விற்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி ரசாயன நிறமூட்டிகள் கலந்த அப்பளங்களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை அவர்கள் மீது உணவு பாதுகாப்பு தர நிறைய சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற செயற்கை வண்ணம் ஊட்டப்பட்ட அப்பளங்களை உண்ணுவதை தவிர்த்து பாரம்பரிய முறையில் இயற்கை மூலப் பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் உளுந்து மற்றும் அரிசி அப்பளங்களை மட்டுமே பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும் ஏற்கனவே தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் ஆகியவற்றின் கலப்படம் செயற்கை நிறமூட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இப்பொழுது கலர் அப்பளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது..
Tags :


















