கவர்னர் மாளிகையில் பாரதியார் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.

by Admin / 14-04-2022 01:18:36am
கவர்னர் மாளிகையில் பாரதியார் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.


தமிழக கவர்னர் மாளிகையில் பாரதியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சிலையை கவர்னர் ஆர்.என்.ரவி நாளை திறந்து வைக்கிறார்.இது குறித்து கவர்னர் மாளிகை செய்திவெளியிட்டுள்ளது.அதில்,"தமிழ்ப்புத்தாண்டை யொட்டி சென்னை ராஜ்பவனில் ,(14ந்தேதி)மாலை 5.00 மணிக்கு மகாகவி பாரதியார் சிலையைக் கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைக்கிறார்.இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்,மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் தமிழக அமைச்சர்கள்,முன்னாள் கவர்னர்கள்,ஐகோர்ட் நீதிபதிகள்,மத்திய,மாநில,அரசு அதிகாரிகள் எல்லோரும் கலந்து கொள்கிறார்கள்என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories