தெரிந்தவர்; தெரியாதவர் என்று பார்க்க மாட்டேன். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் பதவி பறிக்கப்படும் என்று அமைச்சர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை

by Admin / 16-07-2026 08:13:39pm
தெரிந்தவர்; தெரியாதவர் என்று பார்க்க மாட்டேன். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் பதவி பறிக்கப்படும் என்று அமைச்சர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் தங்களின் துறைகளில் எவ்வித ஊழல் அல்லது முறைகேடுகளுக்கு இடம் தரக் கூடாது என்றும் அப்படி தவறு நிரூபிக்கப்பட்டால் அவர்களுடைய அமைச்சர் பதவி உடனடியாக பறிக்கப்படும் என்றும் யார் எனக்குத் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று நான் பார்க்க மாட்டேன் தவறு நடந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் அதற்காக என் மீது யாரும் வருத்தப்பட வேண்டாம் என்றும் மக்கள் இந்த அரசை மிகுந்த நம்பிக்கை உடன் தேர்ந்தெடுத்துள்ளனர் அதனால் ஐந்து ஆண்டு கால ஆட்சிக்காக மட்டும் நாம் இங்கு வரவில்லை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் தூய்மையான ஒரு அரசாக தமிழக வெற்றிக்காக அரசு செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டதோடு அமைச்சர்கள் அரசு பள்ளிகளுக்கு ஆய்வுக்கு செல்லும் போது தேவையற்ற விளம்பர பதிவுகளை சமூக ஊடக ரீல்ஸ்களையோ வீடியோக்களையும் எடுக்கக்கூடாது என்றும் மாணவர்களின் கல்வி பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படக் கூடாது என்றும் கண்டிப்புடன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் வரவுள்ள நிலையில் துறை வாரியான புதிய திட்டங்கள் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் முந்தைய ஆட்சி காலத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் வருவாய் இழப்புகளை கண்டறிந்து அரசின் நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர்கள் எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார் 

 

Tags :

Share via

More stories

Logo