மேட்டூர் அருகே பிரபல ரவுடி கைது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கருமலை கூடல் பகுதியைச் சேர்ந்த குமரவேல் மகன் சிபி வயது ( 22 ). இவர் மீது கடந்த ஆண்டு கருமலை கூடல் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக வீச்சரிவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இன்று மேட்டூர் ரயில் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்த சென்ற போது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து , அவன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Tags :